இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ ராஜா....!!!!காரணம் என்ன!!!

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ ராஜா....!!!!காரணம் என்ன!!!

இஸ்லாம் மதத்தை குறிவைத்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக பாரதிய ஜனதா கட்சியின் தெலுங்கானா எம்எல்ஏ டி ராஜா சிங் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கைதும் இடைநீக்கமும்:

ஹைதராபாத்தில் பாஜக எம்எல்ஏ டி ராஜா சிங்கின் கருத்துக்கு நகர் முழுவதும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக ஹைதராபாத் காவல்துறை இன்று காலை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

சிங் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், மதம், வேண்டுமென்றே  தீங்கிழைக்கும் செயல்கள், மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் எந்த வகுப்பினரின் மத உணர்வுகளையும் கோபமடைய செய்யும் நோக்கம் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங் கைது செய்யப்பட்ட உடனேயே பாஜக அவரை இடைநீக்கம் செய்துள்ளது.

போராட்டமும் கோரிக்கையும்:

பல்வேறு தகவல்களின்படி, திங்கள்கிழமை இரவு நகர போலீஸ் கமிஷனர் சி.வி.ஆனந்த் அலுவலகம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள பிற பகுதிகளில் போராட்டம் வெடித்தது. பல அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) சட்டமன்ற உறுப்பினர்கள்  காவல் நிலையங்களை அடைந்தனர்.  அங்கு போராட்டங்கள் நடத்தப்பட்டன மற்றும் டி ராஜா சிங்குக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தனர்.

ஒவைசி வருத்தம்:

"நுபுர் ஷர்மாவிடம் திருப்தி இல்லை, மற்ற எம்.எல்.ஏ.க்களையும் ஒரே கருத்துகளை சொல்ல வைப்பது அவர்களின் அதிகாரப்பூர்வ கொள்கையாகிவிட்டதா? மக்கள் கோபத்தில் உள்ளனர். மக்கள் கண்களில் கண்ணீர். ஏன் முகமது நபியைப் பற்றி இப்படிச் சொல்கிறார்கள்? இதையெல்லாம் பாஜக நிறுத்த வேண்டும்.  இது எங்கள் கோரிக்கை. நீங்கள் நபியை எவ்வளவு வெறுக்கிறீர்கள் என்பதை மக்களால் பார்க்க முடிகிறது" என்று AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறினார்.

சிங் வெளியிட்ட வீடியோவும் விளக்கமும்:

முஹம்மது நபியைப் பற்றி இழிவான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படும் 10 நிமிட வீடியோவை  சிங் வெளியிட்டார்.  நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபரூக்கியின் நிகழ்ச்சியை அவர் சமீபத்தில் சீர்குலைக்க முயன்று தோல்வியுற்றதாக தெரிகிறது. இந்து கடவுள்களைப் பற்றிய ஃபாருக்கியின் வீடியோக்களைப் போலவே இது ஒரு "நகைச்சுவை" வீடியோ என்று கூறியுள்ளார் ராஜா சிங். ராமர் மற்றும் சீதையை இழிவுபடுத்துவது  நகைச்சுவையாக இருக்க முடியும் போது தன்னுடைய கருத்து நகைச்சுவையாக இருக்க முடியாதா என சிங் கேள்வியெழுப்பியுள்ளார். 

வீடியோவின் சர்ச்சையும் 2ம் பாகமும்:

கைது செய்யப்பட்ட போது, ​​​​திரு சிங் செய்தியாளர்களிடம் தனது வீடியோ பதிவேற்றப்பட்ட சமூக ஊடக தளத்தால் அகற்றப்பட்டதாகவும், அவர் வெளியான பிறகு வீடியோவின்"பகுதி 2" ஐ பதிவேற்றுவதாகவும் கூறியுள்ளார். எனது வீடியோவை யூடியூப்பில் இருந்து நீக்கிவிட்டனர் எனவும் காவல்துறை என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை எனவும் சிங் தெரிவித்துள்ளார்.  தான் விடுதலையானவுடன் அதன் இரண்டாம் பாகம் (வீடியோ) பதிவேற்றம் செய்யப்படும் எனவும் தான்ன் தர்மத்திற்காக போராடுவதாகவும், அதற்காக  இறக்கவும் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார் சிங்.

என்ன நடந்தது?

ஹைதராபாத்தில் போராட்டக்காரர்கள், சிங் குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்தியதாகவும், அவரை உடனடியாக கைது செய்யுமாறும் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர்.

கமிஷனர் அலுவலகம் மற்றும் நகரின் பல இடங்களில் பெரும் கூட்டம் கூடியிருந்தது. போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் பல்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர்.

நகரில் உள்ள கோஷாமஹால் எம்எல்ஏ டி ராஜா சிங் கடந்த வாரம் நகைச்சுவை நிகழ்ச்சிக்கு இடையூறு செய்ய முயன்றார் .

வெள்ளியன்று அவர் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபரூக்கியின் நிகழ்ச்சியை ரத்து செய்ய சுமார் 50 ஆதரவாளர்களுடன் சென்றபோது காவல்துறையினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்தது.

நுபுர் ஷர்மா:

முன்னாள் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா நபிகள் நாயகத்தைப் பற்றிய அவரது கருத்துக்களால் பெரும் இராஜதந்திர பின்னடைவைத் தூண்டிய சில மாதங்களுக்குப் பிறகு திரு சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வந்துள்ளன. நூபுர் ஷர்மா பாஜகவால் இடைநீக்கம் செய்யப்பட்டார், மேலும் அவர் மீது நாடு முழுவதும் 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதையும் படிக்க: இலவச திட்டங்களை கண்டு அஞ்சுகிறதா பாஜக...?