விசாரணைக்கு வரும் சமுத்ரகுப்த் வழக்கு....!!

விசாரணைக்கு வரும் சமுத்ரகுப்த் வழக்கு....!!

இந்திய கடல் பகுதியில் 25ஆயிரம் கோடி மதிப்புள்ள 2500 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

கடந்த 13ஆம் தேதி மேற்கொண்ட சமுத்திரகுப்த் என்ற சிறப்பு நடவடிக்கையின் போது இந்திய கடற்பகுதியில் கப்பல்களில் 134 மூட்டைகளில் 2500 கிலோ மெத்தம்பெட்டமைன் போதை பொருளை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு, கடற்படை உளவு பிரிவு ஆகியோர் இணைந்து மடக்கி பிடித்தனர். 

கொச்சின் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு விசாரணை மேற்கொண்ட போது, 25 ஆயிரம் கோடி போதை பொருளை ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.  போதை பொருளை கொண்டு சென்ற பாகிஸ்தானை சேர்ந்த ஜுபைர் என்பவரையும் கைது செய்தனர்.

போதை பொருள் எந்தெந்த நாட்டிற்கு கொண்டு செல்ல பட இருந்தது, தீவிரவாத கும்பல் ஏதும் இந்த போதை பொருள் கடத்தலுக்கு தொடர்புடையதா என விசாரணை மேற்கொள்ள மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.  

இந்த வழக்கின் விசாரணை இன்று கொச்சின் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:  இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!!