பிரதமர் மோடியுடன் சரத்பவார் திடீர் சந்திப்பு

பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடியுடன் சரத்பவார் திடீர் சந்தித்துள்ளனர். அப்போது அவர்கள், வங்கி ஒழுங்குமுறை திருத்த சட்டத்தால் கூட்டுறவு துறைக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மாநிலங்களவை எம்.பியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார் நேற்று டெல்லியில்  பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இதனை  பிரதமர் அலுவலகம் இரு தலைவர்களின் புகைப்படத்துடன் டுவிட் செய்துள்ளது. 2022-ம் ஆண்டில் நடைபெறும் குடியரசு தலைவர்  தேர்தலில்  ஜனாதிபதி வேட்பாளராக சரத்பவார்  போட்டியிடக் கூடும் என்ற யூகங்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இருந்தாலும் இந்த யூகங்களை சரத்பவார் மறுத்துள்ளார். பிரதமர் மோடி - சரத்பவார் சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் நடைபெற்றது. இரு தலைவர்களும் புதிதாக அமைக்கப்பட்ட கூட்டுறவு அமைச்சகம் மற்றும் விவசாயிகள் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடியுடனான சந்திப்பில் இருவருக்கும் இடையே அரசியல் குறித்து விவாதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனா நிலைமை குறித்து விவாதித்ததாக சரத் பவார் தெரிவித்தார். இதுகுறித்து சரத்பவார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பில்  தேசிய நலனுக்கான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படடது என தெரிவித்துள்ளார்