பொதுமக்கள் போலீசாரிடையே கடும் மோதல் - 6 போலீசார் பலி

அசாம் - மிசோரம் எல்லைப்பகுதியில் பொதுமக்கள், காவல்துறையினர் இடையே ஏற்பட்ட மோதலில் பாதுகாப்பு பணியில் இருந்த 6 போலீசார் உயிரிழந்தனர்.

பொதுமக்கள் போலீசாரிடையே கடும் மோதல்  - 6 போலீசார் பலி

அசாம் - மிசோரம் எல்லைப்பகுதியில் பொதுமக்கள், காவல்துறையினர் இடையே ஏற்பட்ட மோதலில் பாதுகாப்பு பணியில் இருந்த 6 போலீசார் உயிரிழந்தனர்.

அசாம், மிசோரம் மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. இந்நிலையில், எல்லையில் பிரச்சனைக்குரிய பகுதியில் நேற்று மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. மோதலின்போது அரசு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு,  துப்பாக்கி சூடும் நடத்துள்ளது. இந்த வன்முறையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டதாக அந்த மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறி உள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து பேசிய இரண்டு நாட்களில் இந்த வன்முறை ஏற்பட்டுள்ளதால்,  உடனடியாக அமித் ஷா இரண்டு மாநில முதல்வர்களையும் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என அமித் ஷா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.