இந்தியாவில் இதுவரை 62 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்...

இந்தியாவில் இதுவரையில் மொத்தம் 62 கோடி பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 62 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்...

இந்தியாவில் இதுவரையில் மொத்தம் 62 கோடி பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பெரும் தொற்றுக்கு எதிரான வலிமையான பேராயுதமாக தடுப்பூசி அமைந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியதாகவும், பல கட்டங்களை கடந்து தற்போது கடந்த ஜூன்மாதம் 21-ம் தேதி முதல் 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடத் தொடங்கினர் என்றும் தெரிவித்துள்ளது..

இதுவரை 62 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நேற்று ஒரே நாளில் ஒரு கோடி நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது மிக சிறந்த சாதனையாக கருதப்படுகிறது என்றும்,  இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்குடன் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெறுகின்றன என்றும் கூறியுள்ளது.