கொரோனா 2-வது அலை.... 719 மருத்துவர்கள் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா தொற்றின் 2-வது அலைக்கு இதுவரை 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக, இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளது.

கொரோனா 2-வது அலை.... 719 மருத்துவர்கள் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா தொற்றின் 2-வது அலைக்கு இதுவரை 719 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக, இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு பரவிய முதல் அலையை ஒப்பிடுகையில், இரண்டாம் அலை வீரியமிக்கதாக இருந்தது. சுமார் 8 மாதங்கள் நீடித்த கொரோனா முதல் அலையில் 747 மருத்துவர்கள் உயிரிழந்தனர்.

ஆனால், இரண்டாம் அலை தொடங்கி 4 மாதங்களிலேயே 700-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக, இந்திய மருத்துவ சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக பீகாரில் 111 மருத்துவர்களும், டெல்லியில் 109 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர்.