ஜபல்பூர் நோக்கி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திடீர் புகை - அவசரமாக டெல்லியில் தரையிரக்கம்..!

ஜபல்பூர் நோக்கி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திடீர் புகை - அவசரமாக டெல்லியில் தரையிரக்கம்..!

டெல்லியில் இருந்து ஜாபல்பூர் நோக்கி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தினுள் திடீரென புகை சூழ்ந்ததால் விமானத்தை உடனடியாக டெல்லிக்கு திருப்பி தரையிரக்கம் செய்யப்பட்டது. 

டெல்லியில் இருந்து ஜபல்பூர் நோக்கி இன்று சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் சுமார் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த நிலையில் திடீரென விமானத்தின் கேபினில் இருந்து புகை வரத் தொடங்கி உள்ளது.

இதனை கண்டு விமான பணியில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து விமானத்தை ஜபல்பூர் நோக்கி செலுத்தாமல் புறப்பட்ட இடத்துக்கே திருப்பி டெல்லியில் பத்திரமாக தரையிரக்கம் செயப்பட்டுள்ளது. இதில் பயணித்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர், இந்த தகவல்கள் அனைத்தும் ஸ்பைஸ்ஜெட்  சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

#WATCH | A SpiceJet aircraft operating from Delhi to Jabalpur returned safely to the Delhi airport today morning after the crew noticed smoke in the cabin while passing 5000ft; passengers safely disembarked: SpiceJet Spokesperson pic. twitter.com/R1LwAVO4Mk

— ANI (@ANI) July 2, 2022