மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமரின் தாயார்!!! மருத்துவர்கள் கூறியதென்ன?!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமரின் தாயார்!!!  மருத்துவர்கள் கூறியதென்ன?!!

பிரதமர் மோடியின் தாயார் அகமதாபாத்தில் உள்ள ஐநா மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடியும் குஜராத் சென்றடைந்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டில் கடந்த இரண்டு நாட்களில் இரண்டு முக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன. முதலில் அவரது சகோதரர் பிரஹலாத் மோடி கர்நாடக மாநிலம் மைசூரில் சாலை விபத்தில் சிக்கினார். தற்போது, அவரது தாயார் ஹீராபெனின் உடல்நிலை திடீரென மோசமடைந்துள்ளது.  அவர் அகமதாபாத்தில் உள்ள ஐ.நா மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம் மைசூரில் பிரஹலாத் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை விபத்தில் சிக்கிய நேரத்தில் அவருடன் அவரது மகனும் மருமகளும் உடனிருந்தனர்.  இந்த விபத்தில் மூன்று பேரும் பலத்த காயம் அடைந்தனர்.  தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, மருத்துவமனையில் அனைவரும் ஆபத்தான நிலையில் இருந்து வெளியேறி நல்ல நிலையில் உள்ளதாகவும் மூவருக்கும் சிகிச்சை நடைபெற்று வருவதாகவும், இன்று மாலை அல்லது வியாழன் காலைக்குள் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

மறுபுறம், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபெனின் உடல்நிலை இன்று மோசமடைந்துள்ளது. பின்னர் அவர் அகமதாபாத்தில் உள்ள ஐநா மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ஹீராபென் 100 வயதுக்கு மேற்பட்டவர் எனினும் இன்று சுறுசுறுப்பாக இருக்கிறார்.  இந்த ஆண்டு ஜூன் மாதம் அவருடைய 100வது பிறந்தநாளை கொண்டாடினார்.  இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி அவரது பாதங்களைக் கழுவி ஆசி பெற்றார். 

சமீபத்திய அறிக்கையை வெளியிட்ட ஐ.நா மேத்தா மருத்துவமனை நிர்வாகம், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி அகமதாபாத்தில் உள்ள ஐ.நா மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   டி-சர்ட் சர்ச்சையை முடித்து வைத்த ராகுல்!!!