சரத் பவாருக்கு எதிராக கருத்து பதிவிட்ட பாஜக தலைவரை கன்னத்தில் பளார் என அறைந்த ஆதரவாளர்கள்!!

சரத் பவாருக்கு எதிராக கருத்து பதிவிட்ட பாஜக தலைவரை கன்னத்தில் பளார் என அறைந்த ஆதரவாளர்கள்!!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு எதிராக கருத்து பதிவிட்ட பாஜக தலைவரை அவரது ஆதரவாளர்கள் கண்ணத்தில் பளார் என அறையும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு எதிராக பாஜக செய்தி தொடர்பாளர் விநாயக் அம்பேத்கர் என்பவர் இணையத்தில் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சரத் பவார் ஆதரவாளர்கள் விநாயக் அம்பேத்கரின் அலுவலகத்துக்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ஆதரவாளர்களில் ஒருவர் விநாயக் அம்பேத்கரை கண்ணத்தில் பளார் என அறைந்துள்ளார். இதன் வீடியோ காட்சிகளை மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் இணையத்தில் பதிவிட தற்போது வைரலாகி வருகிறது.

சரத் பவாருக்கு எதிராக இணையத்தில் கருத்து பதிவிடுபர்களை போலீசார் கைது செய்வது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. சரத் பவார் ஊழல்வாதி என சமூக வலைதளத்தில் கருத்துப் பதிவிட்ட மராத்தி நடிகை இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.