தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவு மறுபரிசீலனை.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்யும் சட்டப் பிரிவுகளை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.

தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவு மறுபரிசீலனை.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

தேச துரோக வழக்குகளைப் பதிவு செய்யும் சட்டப்பிரிவை பயன்படுத்தி அரசியல் காரணங்களுடன் தனிநபர்கள் அச்சுறுத்த படுவதாகவும் எனவே ஆங்கிலேயர் காலத்தில் இந்திய மக்களை அச்சுறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இந்த சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில்  பலர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்த நிலையில் மத்திய அரசும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்தது.

அதில்,  124ஏ சட்ட பிரிவை நீக்குவது உள்ளிட்டவை குறித்து மத்திய அரசு  பரிசீலித்து வருவதாகவும் அதுவரை இவ்விவகரத்தை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதி என். வி ரமணா தலைமையிலான அமர்வில் விசாரனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

அப்போது  மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் தேச துரோக வழக்குகளைப் பதிவு செய்யும் சட்டப் பிரிவுகளை ரத்து செய்வது அல்லது மறுபரிசீலனை செய்வது தொடர்பான முடிவு எடுக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்று கொண்ட உச்சநீதிமன்றம், தற்போது நிலுவையில் இருக்கக்கூடிய தேசத்துரோக வழக்குகளையும் இடைப்பட்ட காலத்தில் பதிவு பதிவு செய்யப்பட்ட வழக்குகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விவரங்களை விரிவாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை நாளை ஒத்திவைத்தது.