குடியரசு தலைவருக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது!

குடியரசு தலைவருக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது!

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிற்கு சுரினாமின் மிக உயர்ந்த விருதான "Grand Order of the Chain of the Yellow Star"-ஐ அந்நாட்டு அதிபர் சந்திரிகா பெர்சாத் வழங்கி கெளரவித்தார்.

6 நாள் அரசு முறை பயணமாக சுரினாம் நாட்டிற்கு சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிற்கு தலைநகர் பரமரிபோவில் அந்நாட்டு ராணுவத்தினரால் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்நாட்டு அதிபர் சந்திரிகா பெர்சாத்தை சந்தித்த திரெளபதி முர்மு, இருநாடுகளின் நல்லுறவை ஆழப்படுத்துவது, விவசாயம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பு ஆகியவை குறித்து ஆலோசித்தார்.Image

அதனை தொடர்ந்து குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிற்கு சுரினாமின் மிக உயர்ந்த விருதான "Grand Order of the Chain of the Yellow Star"-ஐ அந்நாட்டு அதிபர் சந்திரிகா பெர்சாத் வழங்கி கெளரவித்தார். தொடர்ந்து பேசிய திரெளபதி முர்மு, சுரினாமுக்கு இந்திய வருகையின் 150வது ஆண்டு நினைவு தினத்தின் போது இந்த விருதைப் பெறுவது, அதை மேலும் சிறப்புறச் செய்வதாக தெரிவித்தார். இந்த மரியாதை இரு நாடுகளிலும் உள்ள பெண்களுக்கு அதிகாரம் மற்றும் ஊக்கத்தின் கலங்கரை விளக்கமாகச் செயல்பட்டால், அது இன்னும் அர்த்தமுள்ளதாக இருக்கும்" என்றும் கூறினார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையே சகோதரத்துவ உறவுகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய இந்திய-சுரினாமியர் சமூகத்தின் அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் இந்த கௌரவத்தை தாம் அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்தார். 

மேலும் படிக்க:"ரயில் விபத்தில் தமிழர்கள் யாருக்கும் பாதிப்பில்லை"தமிழ்நாடு அரசு மீட்புக் குழு!