பாதுகாவலர் இறந்த விவகாரம்: போலீசார் விசாரணைக்கு ஆஜராக போவதில்லை... சுவேந்து

தனது பாதுகாவலர் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் சிஐடி போலீசார் முன் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி இன்று ஆஜராக போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

2018-ஆம் ஆண்டு சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு அதிகாரி சக்ரவர்த்தி மர்மமான முறையில் உயிரிழந்தது சர்ச்சையானது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்கிற மர்மம் நீடித்து வருகிறது. நிலக்கரி கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் உறவினருமான அபிஷேக் பானர்ஜியை விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி டெல்லி அமலாக்க இயக்குநகரம் சம்மன் அனுப்பியது.

இந்த  நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாவலர் சுப்ரபிரதா சக்கரவர்த்தியின் மர்ம மரணம் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி கொல்கத்தா சிஐடி போலீசார் மேற்கு வங்க பாஜக எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரிக்கு அம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் இன்றை விசாரணைக்கு அதிகாரி போவதில்லை என கூறப்படுகிறது.