முன்னணி தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை: ரூ.550 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு…  

கொரோனா தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் முன்னணி தனியார் மருந்து நிறுவனம், சுமார் 550 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜதராபாத்தை தலையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹெட்டிரோ எனும் முன்னணி மருந்து நிறுவனத்தில் கடந்த 6-ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கொரோனா தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் முக்கிய மருந்தான ரெம்டெசிவிர் மற்றும் ஃபாவிபைராவிர் உள்ளிட்ட மருந்துகளை தயாரித்து விநியோகம் செய்து வரும் இந்நிறுவனம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது. ஐதராபாத் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையில் 16 லாக்கர்கள் மற்றும் கணக்கில் வராத முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சோதனை குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹெட்டிரோ நிறுவனம் இதுவரை 550 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 142 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரி ஏய்ப்பு குறித்து அந்நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்நிறுவனம் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை தயாரிக்க 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு ரஷ்ய நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.