தெலங்கானா : டெல்லிக்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்து..!

லக்கேஜ்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இருந்து கிளம்பிய திடீர் தீயால் பரபரப்பு..!

தெலங்கானா : டெல்லிக்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்து..!

தெலங்கானா மாநிலம் பகிடிப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செகந்திராபாத்தில் இருந்து டெல்லிக்கு தக்ஷன எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டு இருந்தது. அப்போது பகிடிப்பள்ளி அருகே சென்றபோது, ரயிலின் லக்கேஜ்கள் ஏற்றப்பட்டிருந்த பெட்டியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தொடர்ந்து ரயிலில் இருந்து புகை வருவதை உணர்ந்த பயணிகள் அபாய சங்கலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இதையடுத்து பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து இறங்கி உயிர்தப்பினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்த போதிலும், அந்த பெட்டியில் இருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.