முதல்நாளே காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்ட புதுச்சேரி சட்டப்பேரவை..!

முதல்நாளே காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்ட புதுச்சேரி சட்டப்பேரவை..!

புதுச்சேரியில் 2022 - 23ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர், தொடங்கிய முதல் நாளிலேயே காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. 

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்:

புதுச்சேரி சட்டப்பேரவையில், கடந்த மார்ச் மாதம், 5 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. இதனால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பட்ஜெட் கூட்டத்தொடர், இன்று காலை துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்கியது.

துணைநிலை ஆளுநர் தமிழிசை உரை:

பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய தமிழிசை, புதுச்சேரியில் கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது தனி நபர் வருவாய் அதிகரித்துள்ளதாக கூறினார். இருப்பினும், கூட்டத்தொடர் தொடங்கிய உடன் ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். 

சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்தி வைப்பு:

இதனிடையே, புதுச்சேரியில் பொது பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்காததால், சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக சபாநாயகர் செல்வம் அறிவித்தார். அதேபோல், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது வேறு தேதியில் விவாதம் நடைபெறும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.