ஆட்சியை கைப்பற்றியது ஷிண்டே அரசு :  164 பேர் ஷிண்டேவுக்கு ஆதரவு !!

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், 164 வாக்குகளை பெற்று ஷிண்டே அரசு ஆட்சியை கைப்பற்றியது. 

ஆட்சியை கைப்பற்றியது ஷிண்டே அரசு :  164 பேர் ஷிண்டேவுக்கு ஆதரவு !!

மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு எழுந்ததை அடுத்து, அவர் பதவி விலகினார். தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் கைக்கோர்த்த நிலையில், மாநிலத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அவர் அமர்ந்தார்.

துணை முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸும் பொறுப்பேற்று கொண்டார். புதிய அரசாங்கத்தின் கீழ் சட்டப்பேரவையின் இரண்டு நாள் சிறப்பு கூட்டம் நேற்று ஆரம்பித்த நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராகுல் நர்வேகர், சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. மொத்தம் 288 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பேரவையில், உத்தவ் தாக்கரே தலைமையின் கீழ் மகா விகாஷ் அகாடி கூட்டணிக்கு 99
வாக்குகளே கிடைத்தது.

பெரும்பான்மைக்கும் அதிகமாக 164 வாக்குகளை பெற்ற ஷிண்டே அரசு, வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பாஜகவிலிருந்து 106 சட்டமன்ற உறுப்பினர்கள், ஷிண்டே ஆதரவு எம். எல்.ஏ.க்கள் 40 பேர் மற்றும் 18 சுயேச்சை எம். எல்.ஏ.க்கள், ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு வாக்களித்தனர்.