ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி... இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய அனுமதி...

ரஷ்ய நிறுவனத்தின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி... இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய அனுமதி...

கொரோனா வைரசுக்கு எதிரான ஸ்புட்னிக் வி, ஸ்புட்னிக் லைட் ஆகிய 2  தடுப்பூசிகளை, ரஷ்ய நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதில் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை, ஒருமுறை செலுத்தி கொண்டால் போதுமானது. இந்த இரண்டு தடுப்பூசிகளையும் இந்தியாவில் தயாரிக்க, இங்குள்ள ஆறு முன்னணி நிறுவனங்களிடம் ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது. 

அதன்படி ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை, இந்திய நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. இந்த நிலையில் ஒரு டோஸ் கொண்ட ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் முதல் தடுப்பூசியாக ஸ்புட்னிக் லைட் உள்ளது.