பழனிவேல் தியாகராஜனை கண்டித்த உச்சநீதிமன்றம்....காரணம் என்ன??

பழனிவேல் தியாகராஜனை கண்டித்த உச்சநீதிமன்றம்....காரணம் என்ன??

பிரிட்டிஷ் ராஜ்ஜியம் 2.0 லண்டனுக்கு பதிலாக டெல்லியிலிருந்து இயக்கப்படுகிறது என ஆக்ஸ்போர்டு விவாதத்தில் பங்கேற்று பேசியுள்ளார் தமிழ்நாட்டின் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

பிரிட்டிஷ் ராஜ்ஜியம் 2.0:

பிரிட்டிஷ் ராஜ்ஜியம் என்பது இந்தியாவில் கடந்த காலத்தின் நிகழ்வு என்றாலும் இப்போதும் டெல்லியில் பிரிட்டிஷ் ராஜ்ஜியம் 2.0 நடைபெறுகிறது என பேசியுள்ளார் தியாகராஜன். உண்மையை கூற வேண்டுமானால் பிரிட்டிஷ் ராஜ்ஜியம் இறந்து விட்டது எனவும் தற்போது புதிய மாற்றம் அல்லது உயிர்த்தெழுதல் நடந்துள்ளது எனவும் தியாகராஜன் கூறியுள்ளார்.  நீங்கள் அதை இரண்டு வழிகளில் பார்க்கலாம். ஒரு காலத்தில் இங்கிலாந்தில்,காலனித்துவப்படுத்தப்பட்டவர்கள்  ராஜ்யத்தைக் கைப்பற்றினர். அதையே இந்தியாவில் பார்த்தால் இன்றளவும் ராஜ்ஜியத்தின் 2.0 முறையே லண்டனுக்கு பதிலாக டெல்லியில் நடைபெற்று வருகிறது என கூறியுள்ளார்.

மேலும் படிக்க: ”டெல்லியை தலைமையிடமாக கொண்டு நடக்கும் பிரிட்டிஷ் ராஜ்ஜியம் 2. 0”- பழனிவேல் தியாகராஜன்

திருத்தப்படும் சட்டங்கள்:

இன்னும் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் சிறப்பாக சேவை செய்ய வேண்டியவர்களால் பழமையான சட்டங்கள் தவறாக பயன்படுத்தபடுகின்றன எனவும் இது மனிதர்களின் இயல்பான குணம் எனவும் பழனிவேல் பேசியுள்ளார்.  ஆனால் ஏற்றுக்கொள்ளபட்ட சட்டங்களை தொடர்ந்து திருத்தி வருகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார் நிதியமைச்சர்.

தலைமை நீதிபதி கண்டனம்:

இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இலவசங்கள் குறித்த வழக்கில் பழனிவேலின் உரையை குறித்து கண்டனம் தெரிவிக்கும் விதமாக தி.மு.க தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சனிடம் ”நீங்கள் ஆதரவாக களமிறங்கும் தி.மு.க கட்சி மட்டும்தான் மிகவும் சாதுர்யமான, புத்திசாலித்தனமான கட்சி என்று நினைக்க வேண்டாம் எனவும் எனக்கு இது தொடர்பாக பல விஷயங்கள் கூற வேண்டியுள்ளது” எனவும் உச்சநீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.  

மேலும், ”பல விவகாரங்கள் குறித்து பேசாமல் தவிர்ப்பதால் அது குறித்து எதுவும் அறியாமல் இல்லை என்று நினைக்க வேண்டாம்” எனவும் கூறியுள்ளார்.

மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் பேசுகையில் ”தொலைக்காட்சி நிகழ்ச்சியில் உச்சநீதிமன்றம் குறித்த தமிழக நிதியமைச்சரின் கருத்து ஏற்புடையது அல்ல” என கூறியுள்ளார்.

இதையும் படிக்க: இலவச திட்டங்களை கண்டு அஞ்சுகிறதா பாஜக...?