மத்திய அமைச்சரவை விரிவாக்கம்..? பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்...

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

மத்திய அமைச்சரவை விரிவாக்கம்..? பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்...
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2வது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்துவது மற்றும் 3வது அலையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
மேலும் மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்து, கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சிவசேனா மற்றும் சிரோண்மனி அகாலிதளம் ஆகிய கட்சிகள் ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் அக்கட்சியினருக்கு வழங்கப்பட்ட இலாகாக்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை.
 
மேலும் ராம்விலாஸ் பஸ்வான் இறந்த பின்னர் அவர் வகித்து வந்த நுகர்வோர் விவாகரங்கள் துறை அமைச்சகமும் ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.