ஜம்மு விமானப்படை தளம் தாக்குதல்... என்ஐஏ விசாரணைக்கு வழக்கு மாற்றம்...

ஜம்மு விமானப்படை தளம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஜம்மு விமானப்படை தளம் தாக்குதல்... என்ஐஏ விசாரணைக்கு வழக்கு மாற்றம்...
ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் ட்ரோன் மூலம் இரண்டு வெடிகுண்டுகளை வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் விமானப்படை தளத்துக்கு பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் 2 வீரர்கள் காயமடைந்துள்ளனர். ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் ட்ரோன் மூலம் இரண்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்படுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
 
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாத தாக்குதலை நடத்த ட்ரோன் பயன்படுத்துவது பாதுகாப்பு அச்சுறுத்தலின் தொடக்கத்தை குறிப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் ஜம்மு விமானப்படை தளம் தாக்கப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.