கொரோனாவால் தவித்த டெல்லியை கைவிட்டு குஜராத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த மத்திய அரசு

கொரோனாவால் தவித்த டெல்லியை கைவிட்டு குஜராத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த மத்திய அரசு

கொரோனா 2ஆம் அலை காலகட்டத்தில் டெல்லியை காட்டிலும் குஜராத்துக்கு அதிக எண்ணிக்கையிலான உயிர்காக்கும் மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

கொரோனா 2 ஆம் அலை தாக்கத்துக்கு பெரிதும் பாதிப்புக்கு உள்ளான மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. இங்கு, ஆக்சிஜன் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளின் பற்றாக்குறையால் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்தன.

இந்த நிலையில் 2ஆம் அலை காலகட்டத்தில் டெல்லியை காட்டிலும் குஜராத்துக்கு ரெம்டெசிவிர் மற்றும் டோசிலிசுமாப் போன்ற உயிர்காக்கும் மருந்துகள் அதிக எண்னிக்கையில் விநியோகிக்கப்பட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

டெல்லியில் கிட்டதட்ட 14 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 920 Tocilizuma ஊசிகளும், 3.10 லட்சம் எண்ணிக்கையிலான ரெம்டெசிவி மருந்துகளும் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், 8 லட்சம் பாதிப்புகளை கொண்ட குஜராத்துக்கு ஆயிரத்து 465 Tocilizuma ஊசிகளும், 5.75 லட்சம் எண்ணிக்கையிலான ரெம்டெசிவிர் மருந்துகளும் விநியோகிக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.