மத்திய அரசின் தவறான கொள்கைகளே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் -  முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் !!

மத்திய அரசின் தவறாக கொள்கைகளே நாட்டில் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு வழிவகுத்து உதய்பூரில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். 

மத்திய அரசின் தவறான கொள்கைகளே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் -  முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் !!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்று வரும் சிந்தனையை அமர்வுக் கூட்டத்தின் இரண்டாவது நாள் துவக்கத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

டெல்லியில் நேற்று நடந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் சார்பாக இரங்கல்களை தெரிவித்துக் கொண்டார்.  தொடர்ந்து பேசிய அவர், பொருளாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து நடைபெற்று வரும் சிந்தனை அமர்வு கூட்டத்தில் ஆலோசித்து வருவதாகவும் நேற்றைய தினம் கிட்டத்தட்ட 4 மணி நேரங்கள் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று மற்றும் நாளை இந்த ஆலோசனைகள் தொடரும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டின் மக்களிடமும் பாரதிய ஜனதா கட்சியின் தவறான அரசியல் கொள்கை மற்றும் அரசுக்கான திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார். 

நாட்டின் மிக முக்கியமான பிரச்சனைகள் குறித்து சிந்தனை அமர்வு கூட்டத்தில் காங்கிரஸ் ஆலோசித்து வருவதாக தெரிவித்த அவர், இந்தியாவில் வேலையின்மை விகிதம் 7. 88 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் மத்திய அரசின் தவறான கொள்கைகள் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் உயர்ந்து உள்ளதாகவும், 160 நாடுகள் கொண்ட பட்டினி நாடுகளின் பட்டியலில் இந்தியா 101 வது இடத்திற்கு வந்துள்ளது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார்.  இவை தவிர ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இந்தியாவில் குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் பாதிப்பை சந்தித்து வருவதாகவும், பொருளாதார கொள்கைகளில் உடனடி மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் ஓரளவுக்கு உயர்த்த முடியும் எனவும் தெரிவித்தார்.  

தொடர்ந்து பேசிய அவர் மத்திய அரசு கோதுமையை ஏற்றுமதி செய்வதற்கான தடை விதித்திருக்கக்கூடிய நிலையில் கோதுமை முறையாக கொள்முதல் செய்வதில் மத்திய அரசு தவறிவிட்டது எனவும் முறையாக கோதுமைகளை கொள்முதல் செய்து இருந்தாலே கோதுமை ஏற்றுமதிக்கான தடைகள் விதிக்காமல் இருந்திருக்கலாம் என கருத்து தெரிவித்தார்.  அதே நேரத்தில் இனி வரக்கூடிய நாட்களில் மத்திய அரசு விவசாயிகளுடைய பொருட்களை கொள்முதல் செய்வதில் விவசாயிகளுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.