மகாராஷ்டிரா அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு :  முதல்வர் இல்லத்திலிருந்து வெளியேறினார் உத்தவ் தாக்கரே !!

முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய தயார் என மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ்தாக்கரே தெரிவித்த நிலையில், தனது முதல்வர் இல்லத்திலிருந்து அவர் வெளியேறியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

மகாராஷ்டிரா அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு :  முதல்வர் இல்லத்திலிருந்து வெளியேறினார் உத்தவ் தாக்கரே !!

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் உத்தவ்தாக்கரேவுக்கு எதிராக  போர்கொடி தூக்கியுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ. ஏக்நாத் ஷிண்டே, தனக்கு ஆதரவான 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுடன் கவுஹாத்தியில் தங்கியுள்ளார். இதனால், மகாராஷ்டிரா அரசியலில் குழுப்பம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 

இந்நிலையில், முதலமைச்சரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே, மாநில மக்களுக்கு  சமூகவலைதளமான பேஸ்புக் பக்கம் மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிருப்தில் எம்எல்ஏக்கள் தன் மீது நம்பிக்கை இல்லை என்பதை தன் முகத்திற்கு முன்பு கூறினால் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார். மேலும், தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு முதல்வர் இல்லத்தை காலி செய்யவும் தயார் என தெரிவித்திருந்தார். 

தான் சொன்னபடியே, நேற்றிரவு முதல்வர் இல்லத்திலிருந்து தனது குடும்பத்தினருடன் வெளியேறிய உத்தவ் தாக்கரே, தனது பூர்வீக வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டுவந்து, அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். 

இந்த பரபரப்பான சூழலில், இயற்கைக்கு மாறான கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேற வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கட்சியை காப்பாற்ற இயற்கைக்கு மாறான இந்த கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டிய தேவை இருக்கிறது என்றும் மகாராஷ்டிரா நலனை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.