ஆல்ஃபாவை காட்டிலும் டெல்டா வகை ஆபத்து நிறைந்தது.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஆல்ஃபா தொற்றுடன் ஒப்பிடுகையில் டெல்டா வகை ஆபத்தை இரட்டிப்பாக்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆல்ஃபாவை காட்டிலும் டெல்டா வகை ஆபத்து நிறைந்தது.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மரபணு மாற்றமடைந்து வரும் கொரோனா தொற்றுக்கு உலக சுகாதார அமைப்பு கிரேக்க எழுத்துக்களை பெயர்களாக சூட்டி வருகிறது. அதன்படி டெல்டா வகை தான் இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலைக்கு காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை கொண்டு இங்கிலாந்து ஆராய்ச்சி கழகம் நடத்திய ஆய்வில் ஆல்ஃபா தொற்றுடன் ஒப்பிடுகையில் டெல்டா வகை மருத்துவமனையில் அனுமதிக்கப்படக்கூடிய ஆபத்தை இரட்டிப்பாக்குவது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.

கிட்டதட்ட 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 1.8 விழுக்காடு நோயாளிகளே தடுப்பூசியின்முழு 2 டோஸ் அளவுகளையும் செலுத்திக் கொண்டவர்கள் எனவும் எஞ்சிய அனைவரும் தடுப்பூசி போடாதவர்கள் மற்றும் ஒரு டோஸ் போட்டுக் கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.