வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற துணை நிலை ஆளுநர்.... வரவேற்பில் கைகலப்பு.. அதிர்ச்சி அடைந்த தமிழிசை சவுந்தரராஜன்!!

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் இரு தரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற துணை நிலை ஆளுநர்.... வரவேற்பில் கைகலப்பு..  அதிர்ச்சி அடைந்த தமிழிசை சவுந்தரராஜன்!!

ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றங்கரையையொட்டி புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் அமைந்துள்ளது. கோதாவரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏனாமுக்குள்ளும் நீர் புகுந்தது.

இதையடுத்து வெள்ள பாதிப்புகளை பார்வையிட புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை இன்று ஏனாம் சென்றார். அப்போது அவரை வரவேற்பது தொடர்பாக  ஏனாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி அசோக்கின் ஆதரவாளர்களுக்கும், புதுச்சேரி அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணராவின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதையடுத்து இரு தரப்பையும் கலைந்து செல்ல வைத்த காவல்துறையினர், துணை நிலை ஆளுநரை பத்திரமாக மாவட்ட அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர்.அங்கு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் தமிழிசை வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.