உயர்ந்தது ரெப்போ வட்டி விகிதம் :  ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்தார் !!

கடந்த மே மாதம் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை  அதிகரிக்கப்பட்டதால் ரெப்போ வட்டி விகிதம் 4.40% ஆக இருந்தது.

உயர்ந்தது ரெப்போ வட்டி விகிதம் :  ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்தார் !!

பணவீக்கம்

கொரோனா பரவல், ரஷ்யா- உக்ரைன் போரால்  நாட்டில் பணவீக்கம் கடந்த ஜனவரி மாதம் முதல் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனை 2 முதல் 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது.  

ரெப்போ வட்டி விகிதம்

இதற்கென கடந்த 2 ஆண்டுகளாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தாமல் இருந்த ரிசர்வ் வங்கி, கடந்த மே மாதம் முதல் மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி கடந்த மே மாதம் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 4 புள்ளிகளாக அதிகரித்ததை அடுத்து, ரெப்போ வட்டி விகிதம் 4 புள்ளி 4 சதவீதம் என இருந்தது.

ஸ்திரமற்ற நிலை

இதனைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நிதி கொள்கை கூட்டத்துக்கு பின்னர் ரெப்போ வட்டி  பூஜ்ஜியம் புள்ளி 5 புள்ளிகள் உயர்ந்து 4 புள்ளி 9 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்த மாத நிதி கொள்கை கூட்டத்தின் பிறகு, மும்பையில் செய்தியாளர்களை ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் சந்தித்தார்.  அப்போது  நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதாகவும், பங்குச்சந்தையில் ஸ்திரமற்ற நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

வட்டி விகிதம் உயர்வு

இதனால் 2023 நிதியாண்டில் பணவீக்கம் 7 புள்ளி 3 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கவலை தெரிவித்தார்.  இதனை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதத்தை புள்ளி 5 புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்துள்ளார்.

இந்த புதிய அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ரெப்போ வட்டி விகிதம்  5 புள்ளி 4 சதவீதமாக அதிகரித்துள்ளது.  இதன் மூலம் கடன்களுக்கான வட்டி விகிதம் கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடைந்துள்ளது குறிப்பிடப்பிடத்தக்கது.