எரிபொருளுக்கான கலால் வரி குறைப்பால்...மத்திய அரசுக்கு ரூ.2.2 லட்சம் கோடி இழப்பு - நிர்மலா சீதாராமன்!

எரிபொருளுக்கான கலால் வரி குறைப்பால், மத்திய அரசுக்கே சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

எரிபொருளுக்கான கலால் வரி குறைப்பால்...மத்திய அரசுக்கு ரூ.2.2 லட்சம் கோடி இழப்பு - நிர்மலா சீதாராமன்!

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த சனிக்கிழமை பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயாகவும் குறைத்து, இந்த நடைமுறை ஞாயிற்று கிழமை முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்தார். ஆனால் மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் அதிர்ந்து போன மாநில அரசுகள், இதனால் மாநிலங்களுக்கு கிடைக்கப்பெறும் வரி வருவாய் குறைக்கப்படும் என குற்றஞ்சாட்டின.

இந்தநிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நிர்மலா சீதாராமன், பெட்ரோலுக்கான சாலை மற்றும் கட்டுமான செஸ் வரியே 13ல் இருந்து 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதேபோல்  டீசலுக்கான சாலை மற்றும் கட்டுமான செஸ் வரி 8ல் இருந்து 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார். சாலை மற்றும் கட்டுமானத்துக்கான செஸ் வரி மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை என விளக்கினார். எனவே செஸ் வரி குறைப்பால் மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லை என தெளிவுப்படுத்திய அவர், இதனால் மத்திய அரசிற்கே 2 புள்ளி 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.