குட் நியூஸ் சொன்ன சீரம் நிறுவனம்: மக்கள் ஹேப்பி

குட்  நியூஸ் சொன்ன சீரம் நிறுவனம்: மக்கள் ஹேப்பி

ஜூன் மாதத்தில் 10 கோடி டோஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்து வழங்க முடியும் என மத்திய அரசுக்கு இந்திய சீரம் நிறுவனம் கடிதம் எழுதி உள்ளது.


இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அண்மையில் எழுதிய கடிதத்தில், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தங்களது  ஊழியர்கள் 24 மணிநேரமும் பணியாற்றி வருகிறார்கள் என்றும் மே மாதத்தில் தங்களது உற்பத்தித்திறன் 6 புள்ளி 5 கோடிகளாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் மாதத்தில் 9 முதல் 10 கோடி வரையிலான தடுப்பூசி டோஸ்களை உற்பத்தி செய்து வழங்க முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று எஸ்ஐஐ யின் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகார இயக்குநர் பிரகாஷ் குமார் சிங் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

கொரோனாவில் இருந்து நாட்டு மக்களையும், உலகையும் காப்பதற்கு இந்திய சீரம் நிறுவனம் எப்போதுமே உண்மையான அக்கறை கொண்டுள்ளது என்றும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசுடன் தங்களது தலைமைச்செயல் அதிகாரி ஆதார் சி பூனவல்லாவின் தலைமையில், தங்களது  குழு அரசுடன் இணைந்து இடைவிடாமல் செயல்படுகிறது என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.