மனித சமுதாயத்தை பாதுகாக்க புத்தரின் போதனைகளே தீர்வு - பிரதமர் மோடி

மனித சமுதாயம் தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு புத்தரின் போதனைகளை பின்பற்றுவதே ஒரே தீர்வு எனப் பிரதமர் மோடி கூறினார்.

மனித சமுதாயத்தை பாதுகாக்க புத்தரின் போதனைகளே தீர்வு - பிரதமர் மோடி

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் ஒருங்கிணைந்த அமைப்பான குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார்.

அந்நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், முதல் நாளான இன்று பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் எளிதாக தொழில் தொடங்குவதற்கு உள்ள வாய்ப்புகளை பற்றி, நிறுவனங்களின் தலைவர்களிடம் அவர் விளக்கினார்.

இதனைத் தொடர்ந்து ஜப்பான் வாழ் இந்தியர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவரை அங்கிருந்தவர்கள் மோடி மோடி என முழக்கமிட்டு வரவேற்றனர்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் ஜப்பான் முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார். புத்தரின் போதனைகள் உலகம் முழுமைக்கும் தேவைப்படுவதாகவும் கூறினார். வன்முறை, தீவிரவாதம், பருவநிலை மாற்றம் உலகின் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் மனித சமுதாயத்தை காக்க புத்தரின் போதனைகளே தீர்வு எனவும் குறிப்பிட்டார்.