வரலாறு காணத அளவு சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு.. 1 டாலர் ரூ.82.22 ஆக சரிவு.. காரணம் என்ன?

வரலாறு காணத அளவு சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு.. 1 டாலர் ரூ.82.22 ஆக சரிவு.. காரணம் என்ன?

ரூபாயின் மதிப்பு சரிவு:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருவது பொருளாதர வல்லுநர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஒருவராமாக சரிவு:

கடந்த ஒரு வாரமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து இன்று வரலாறு காணாத அளவு முதன்முறையாக அடிமட்டமாக சரிந்துள்ளது. 

ரூ.79.87 டூ ரூ.82.38:

கடந்த செப்டம்பர் 30-ம் தேதி ரூ.79.87ஆக இருந்த அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இன்று ரூ.82.38ஆக சரிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதிய வரலாற்று வீழ்ச்சி:

நேற்று ரூ.81.90ஆக இருந்த ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 32 காசுகள் வீழ்ச்சியடைந்து ரூ.82.22ஆக புதிய வரலாற்று வீழ்ச்சியை கண்டுள்ளது. 

காரணங்கள்:

வெளிநாட்டு சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உள்நாட்டு பங்குகளின் முடக்கம், கச்சா எண்ணெய் விலை போன்றவை இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.