இந்தியாவில் மூன்றாம் அலை குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்ற தரவுகள் இல்லை !!

இந்தியாவில் மூன்றாம் அலை  குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்ற தரவுகள் இல்லை !!

இந்தியாவில் மூன்றாம் அலை குழந்தைகளை தீவிரமாக பாதிக்கும் என்பதற்கான எந்த தரவுகளும் இதுவரை வெளியாகவில்லை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் மருத்துவர் ரன்தீப் குலேரியா அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை தாக்கமானது குழந்தைகளையே பெரிதும் பாதிக்கும் என நிர்புணர்கள் எச்சரிப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் ரன்தீப் குலேரியா, இந்தியாவிலோ அல்லது சர்வதேச அளவிலோ கொரோனாவின் அடுத்த அலையில் குழந்தைகளே தீவிரமாக பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவில் இரண்டாவது அலையின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 60 முதல் 70 சதவீதத்தினர் இணை நோய்கள், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழந்தைகள் எனவும்  அவர்கள் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.