கங்கை நதியில் கொரோனா வைரசுக்கான தடயங்கள் எதுவும் இல்லை

கங்கை நதியில் கொரோனா வைரசுக்கான தடயங்கள் எதுவும் தென்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கங்கை நதியில் கொரோனா வைரசுக்கான தடயங்கள் எதுவும் இல்லை

கங்கை நதியில் கொரோனா வைரசுக்கான தடயங்கள் எதுவும் தென்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

உத்திரபிரதேசம் மற்றும் பீகாரில் கங்கை நதியில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மிதந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் கங்கை நதியில் நீர் மட்டம் உயர்ந்ததை அடுத்து கரையோரங்களில் புதைக்கப்பட்டிருந்த சடலங்கள் நீரில் மிதக்க தொடங்கின. இதனால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் கங்கை நீதி கொரோனா வைரஸ் பரவி இருக்கிறதா என ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி தேசிய கங்கை தூய்மை திட்ட இயக்கம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், இந்திய நச்சுயியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து பல்வேறு பகுதிகளில் இருந்து கங்கை நதியின் மாதிரியை சேகரித்து ஆய்வு நடத்தியது. இதில் கங்கை நதியில்  கொரோனா வைரசுக்கான தடயங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.