ரூ.49 லட்சத்தை எரிப்பதை விட வேறு வழியில்லை! திருப்பதி தேவஸ்தானம் குமுறல்!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தற்போது வரை மாற்ற முடியாமல் தேவஸ்தானம் பரிதவித்து வருகிறது.

ரூ.49 லட்சத்தை எரிப்பதை விட வேறு வழியில்லை! திருப்பதி தேவஸ்தானம் குமுறல்!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தற்போது வரை மாற்ற முடியாமல் தேவஸ்தானம் பரிதவித்து வருகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 8-ம் தேதி இரவு தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது. உங்களிடம் இருக்கும் அந்த நோட்டுகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள். இந்தியாவை கறுப்புப்பணம் இல்லாத நாடாக மாற்றுவோம்" என்றார். ஆனால் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை தற்போது வரை மாற்ற முடியாமல் தேவஸ்தானம் பரிதவித்து வருகிறது. இதுவரை 49 கோடியே 70 லட்சம் ரூபாய் அளவுக்கு பழைய நோட்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் அளவிலான 1000 ரூபாய் நோட்டுகளும், 6 லட்சத்து 34 ஆயிரம் அளவிலான 500 ரூபாய் நோட்டுகளும் தேவஸ்தான கருவூலத்தில் உள்ளன. இதனை மாற்றக்கோரி நிதி அமைச்சகத்திடம் பலமுறை அனுமதி கேட்டும் இதுவரை உரிய பதில் கிடைக்காததால் தேவஸ்தானம் கடும் அவதிக்குள்ளாகி வருகிறது. 

இதனிடையே இந்த விவகாரத்தில் மத்திய அரசு தீர்வு காணாவிட்டால் இந்த பணத்தை அழிக்க வேண்டியதை தவிர தேவஸ்தானத்திற்கு வேறு வழி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.