இன்றைய நிலவரம்... ஏற்றத்துடன் துவங்கிய 5வது நாள் பங்குச்சந்தை!!

நடப்பு வாரத்தின் 5வது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் ஆயிரத்து 333 புள்ளிகள் அதிகரித்து,  55 ஆயிரத்து 681 ஆக வர்த்தகமாகியுள்ளது.

இன்றைய நிலவரம்... ஏற்றத்துடன் துவங்கிய 5வது நாள் பங்குச்சந்தை!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக நேற்று ஆசிய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இதன் தாக்கம் மும்பை பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. நேற்றைய வர்த்தக முடிவில் சென்சக்ஸ் குறியீடு  2 ஆயிரத்து 702 புள்ளிகள் சரிந்து 54 ஆயிரத்து 529 ஆகவும், தேசிய பங்கு சந்தை குறியீடு நிப்டி 815 புள்ளிகள் குறைந்து 16 ஆயிரத்து 248 ஆகவும் நிலை கொண்டிருந்தது. 

இந்தநிலையில் இன்று பங்குச்சந்தை ஆரம்பமானதும், வங்கிகள், தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளில் ஏற்றம் காணப்பட்டன.  வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்சக்ஸ் 1,333 புள்ளிகள் வரை அதிகரித்து, 55 ஆயிரத்து 681 ஆக நிலை கொண்டு வர்த்தகமானது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டியும் 352 புள்ளிகள் உயர்ந்து, 16 ஆயிரத்து 600 ஆக நிலைகொண்டது.