மூவர்ண கொடி - மூன்று நாள் கொண்டாட்டம்!!!

மூவர்ண கொடி - மூன்று நாள் கொண்டாட்டம்!!!

ஹர் கர் திரங்கா பிரச்சாரம் ஆகஸ்ட் 13 முதல்  தொடங்க இருப்பதால், இந்தியக் கொடி சட்டம் 2002ல் உள்துறை அமைச்சகம்  திருத்தம் செய்துள்ளது.


ஹர் கர் திரங்கா பிரச்சாரம்:

சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 13 முதல் 15 வரை மூன்று நாட்களுக்கு மூவர்ணக் கொடியை தங்கள் வீடுகளில் ஏற்றுவதற்கு குடிமக்களை ஊக்குவிக்கும் வகையில் 'ஹர் கர் திரங்கா' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 13 முதல் 15 வரை மூன்று நாட்களுக்கு 20 கோடி மூவர்ணக் கொடிகள் வீடுகளின் மேல் ஏற்றப்படும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் இதில் ஈடுபடுத்தப்படும்.

சட்டம் சொல்வது என்ன?

சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை மட்டுமே இந்தியாவின் தேசியக் கொடியை பறக்க விடவேண்டும்.  காலநிலையில் மாற்றம் ஏற்பட்டால் அதை உடனே இறக்கி விட வேண்டும்.  பொது இடங்களில் மட்டுமே தேசிய கொடி பயன்படுத்தப்பட வெண்டும்.

சட்டத்தில் திருத்தம்:

மத்திய அரசு ஆகஸ்ட் 13 முதல் ஹர் கர் திரங்கா பிரச்சாரத்தை தொடங்கவுள்ள நிலையில், தேசியக் கொடியை நாள் முழுவதும் பறக்க அனுமதிக்கும் வகையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.  இந்திய தேசிய கொடி சட்டம், 2002ல் பகுதி-II பத்தி 2.2 இன் பிரிவு (xi) : தேசிய கொடியை இரவும் பகலும் பறக்க விடலாம் என உள்துறை அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது.

முந்தைய மாற்றம்:

2002ல் இந்தியக் கொடிக் குறியீட்டின் பகுதி-I  பத்தி 1.2 : தேசியக் கொடியானது கையால் சுழற்றப்பட்டு கையால் நெய்யப்பட வேண்டும் அல்லது இயந்திரத்தால் செய்யப்பட்ட பருத்தி / பாலியஸ்டர் / கம்பளி / பட்டு காதி பந்தினால் செய்யப்பட வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டது.

இதற்கு முன்னர் இயந்திரத்தில் தயாரிகப்பட்ட கொடிகள் மற்றும் பாலியஸ்டர் கொடிகள் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை.

உள்துறை செயலர் கடிதம்:

டிசம்பர் 30, 2021 மற்றும் ஜூலை 20, 2022 இல் தேசிய கொடி குறித்து அரசியலமைப்பில் செய்யப்பட்ட மாற்றங்களை விளக்கும் இணைப்புகளுடன், பிரச்சாரம் குறித்து அனைத்து அரசுத் துறைகளுக்கும் உள்துறைச் செயலர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்