மன்னிக்கவும் என்ற வாசகத்தை பள்ளி வளாகத்தில் எழுதிய மா்ம நபா்கள் - போலீசார் வலைவீச்சு..

மன்னிக்கவும் என்ற வாசகத்தை பள்ளி வளாகத்தில் எழுதிய மா்ம நபா்கள் - போலீசார் வலைவீச்சு..

கர்நாடக மாநிலம் பெங்களூர் பள்ளி வளாகத்தில் மன்னிக்கவும் என்ற வாசகத்தை எழுதியுள்ள மர்ம நபா்களை காவல்துறையினா்  தேடி வருகின்றனா்.

 காமக்ஷிபல்யா பகுதி சாந்திதாமா தனியார் பள்ளியின் பள்ளி நுழைவாயில் மற்றும் சுவர்கள், மற்றும் சுற்றியுள்ள சாலைகள் முழுவதும் இந்த மன்னிப்பு என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கம் போல் பள்ளிக்கு வந்த ஆசிரியா்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் இதனை பார்த்து அதிரச்சியடைந்தனா். தகவலறிந்து சென்ற  காவல்துறையினா்,  அங்கு பதிவான சிசிடிவி  காட்சிகள் கொண்டு மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.