"பண்டிகைக் காலங்களில் மாஸ்க் அணிய வேண்டும்" மக்களவையில் அறிவுறுத்திய மன்சுக் மாண்ட்வியா!

"பண்டிகைக் காலங்களில் மாஸ்க் அணிய வேண்டும்" மக்களவையில் அறிவுறுத்திய மன்சுக் மாண்ட்வியா!

கிறிஸ்துமஸ், புதுவருடப் பிறப்பு உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் மாஸ்க் அணிவதை மக்கள் உறுதிப்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்துள்ளார்.


புதிய வகைக் கொரோனா பரவல் தொடர்பாக மக்களவையில் மன்சுக் மாண்ட்வியா விளக்கமளித்தார். அப்போது உலகளாவிய கொரோனா நிலைமையை கண்காணித்து வருவதாகவும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 

உலகில் கொரோனா தொற்று அதிகரித்து வரும்போது, இந்தியாவில் தொற்று குறைந்து வருவதாகக் கூறினார். சர்வதேச விமான நிலையங்களில் கொரோனா தடுப்பு சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இதையும் படிக்க: வீட்டை விட்டு வெளியே வந்தால் கால் இருக்காது...அமைச்சர் கீதா ஜீவனுக்கு மிரட்டல் விடுத்த சசிகலா புஷ்பா!

நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளுக்கு RTPCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, வரும் பண்டிகைக் காலங்களில் மாஸ்க் அணிவதையும், சானிடைசர் பயன்படுத்துவதையும், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதையும், மக்கள் கடைபிடிக்க வேண்டும் என மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளதாகவும் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்துள்ளார்.