டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு 49.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு - மக்கள் வீடுகளுக்குள் இருக்க அறிவுரை!

டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் சுட்டெரித்து வருவதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு வானிலை மையம் அறிவித்துள்ளது.

டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு 49.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு - மக்கள் வீடுகளுக்குள் இருக்க அறிவுரை!

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் இன்று முதல் அடுத்த சில தினங்களுக்கு வெப்பம் படிப்படியாக குறையும் என கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் டெல்லியின் முங்கேஷ்பூர், நஜப்கர், உத்தரபிரதேசத்தின் பண்டல்கந்த் மண்டலத்தில் 49 டிகிரி செல்சியஸை கடந்து வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் வறட்சி, தோல் நோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வெப்பம் மேலும் நீடிக்க வாய்ப்புள்ளதால், முடிந்தவரை வெளியே செல்வதை தவிர்க்கவும், வெளியே செல்லும் போது தண்ணீர் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பாதுகாப்புடன் செல்லவும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.