உத்திரபிரதேசம்: நோயாளிக்கு ரத்தத்திற்கு பதில் பழச்சாறு ஏற்றிய தனியார் மருத்துவமனை.. சீல் வைத்த அதிகாரிகள்..

பழச்சாறு ஏற்றப்பட்ட நோயாளி உயிரிழந்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை..!

உத்திரபிரதேசம்: நோயாளிக்கு ரத்தத்திற்கு பதில் பழச்சாறு ஏற்றிய தனியார் மருத்துவமனை.. சீல் வைத்த அதிகாரிகள்..

அரசு மருத்துவமனை:

பொதுவாகவே மக்களுக்கு அரசு சார்பில் நடத்தப்படும் பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கும். அதற்கு காரணம் அங்கு கட்டமைப்பு வசதிகள் சரியாக இருக்காது, மருத்துவர்கள், செவிலியர்கள் அலட்சியமாக செயல்படுவர் என பல குற்றச்சாட்டுகள் இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. 

அலட்சியத்தில் தனியார் மருத்துவமனை:

ஆகையால் தான் பொருளாதாரத்தில் சற்று பின் தங்கியவர்கள் கூட பணம் செலவழித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார்கள். ஆனால் அங்கோ அரசு மருத்துவமனைகளை காட்டிலும், மெத்தனப் போக்கு அதிகரித்து காணப்படுகிறது. 

ரத்தத்திற்கு பதில் பழச்சாறு:

எந்த அளவிற்கு என்றால், நோயாளிக்கு ரத்தத்திற்கு பதிலாக பழச்சாறுவை ஏற்றும் அளவிற்கு. அதிர்ச்சியாக உள்ளதா? இப்படிப்பட்ட சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. 

டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளி:

பிரயாக்ராஜில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவருக்கு ரத்த தட்டுக்கள் குறைவாக இருந்துள்ளது. அதற்காக அவருக்கு ரத்தம் ஏற்ற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

நோயாளி உயிரிழப்பு:

அதன்படி அவருக்கு ரத்தத்திற்கு பதிலாக பழச்சாறு ஏற்றியுள்ளனர் அங்கு பணிபுரிபவர்கள். இதனால் அந்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் அலுவலகம், அந்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளது.