பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் - கர்நாடகாவில் தான் அதிகம் : ஆய்வில் வெளியான தகவல்!

திருமணமான பெண்களை கண் பகுதியில் தாக்குவதும், கை கால்களை முறிப்பது போன்ற கொடூர செயல்கள் அதிகரித்து வருகிறது.

பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் - கர்நாடகாவில் தான் அதிகம் : ஆய்வில் வெளியான தகவல்!

பார்த்து பார்த்து நடத்தப்படும் திருமணங்களில் வரதட்சணை பிரச்சினை, மாமனார்-மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினரின் கொடுமை, கணவர் கொடுமை இப்படி பல பிரச்சினைகளால் திருமண பந்தங்கள் பாதியில் முறிந்து போகின்றன.

இது பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள் தான் இதில் ஒரு சில பெண்களே அதிலிருந்து வெளிவந்து முறையாக விவாகரத்து பெற்று மறுமணம் புரிந்து நிம்மதியான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால் பல பெண்கள் தனக்கு கிடைத்தது இது தான் என தலைவிதியென சகித்துக் கொண்டும் கொடுமைகளை அனுபவித்து கொண்டு வருகின்றனர். 

இது குறித்த கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகையில் , பெண்களுக்கான அதிகபடியான கொடுமைகள் தொல்லைகள் கொடுப்பது குறித்து தேசிய குடும்ப நலத்துறை ஆய்வு ஒன்றை மேற்கொள்ள, இந்த ஆய்வில் இறுதியில் பெண்களுக்கு அதிகமான கொடுமைகள் தொல்லைகள் கொடுத்து வருவதில் கர்நாடக மாநிலமே தலைசிறந்து முதல் இடத்தில் பங்கு வகிக்கிறது. 

கர்நாடக மாநிலத்துக்கு எதிராக 48 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருக்கிறது. இந்த வழியில் பீகார் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. இந்த ஆய்வுகளுக்கு பின்னதாக கர்நாடகாவில் எவ்விதத்தில் இந்த கொடுமைகள் மிகவும் அதிகாமாக இருக்கிறது என்பதை குறித்த பட்டியலையும் வெளியிட்டுள்ளது. 

மனதளவிலும், உடல் அளவிலும், பாலியல் அளவிலும் அதிக தொல்லைகள் மற்றும் கொடுமைகள் கொடுப்பது கணவர்கள்தான். இதுதவிர சில கணவர்கள் வெளியுலகிற்கு நல்லவர்களாக இருந்தாலும் மனைவிகளிடம் மட்டும் சைக்கோ போல் நடந்து கொடுமைப்படுத்துவதும் உண்டு என்று கூறப்படுகிறது.  மேலும் குடும்ப சண்டைகளை காரணம் காட்டி பெண்கள் அதிகம் தாக்கப்படுவதும் உண்டு. இதில் கணவர்மார்களிடம் சிக்கி தவிக்கும் பெண்களை காக்க அவரது குடும்பதினரும் மற்றாரும் முன்வருவதில்லை. 

இதில் தங்களது மனைவிகளை கண் பகுதிகளில் தாக்குவதும் , கை கால்களை முறிப்பது போன்ற கொடூர முறைகளை பின்பற்றுவது போன்று இருந்து வருகின்றனர். மேலும் பெண்கள் மீது தீ வைக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இருப்பினும் பெண்கள் பிரச்சனைகளை சகித்துக் கொண்டு சமூகத்தை மனதில் வைத்து கொண்டு தங்களுக்கான கொடுமைகளை வெளியில் சொல்வதே இல்லையாம். இதில் 58 பெண்கள் இதுபோன்ற பிரச்சனைகளை தாங்கிக் கொள்ள இயலாமல் தங்களின் பெற்றோர் வீடுகளை தேடி தஞ்சம் அடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்த அளவீலான சதவீதம் கொண்ட பெண்களே காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்துக்கு சென்று புகார் அளித்து தங்களுக்கான நியாயத்தை நாடி வருவதாகவும் இந்த ஆய்வில் விளக்கியுள்ளனர்.