விஸ்மயா தற்கொலை வழக்கு.. கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!!

விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விஸ்மயா தற்கொலை வழக்கு.. கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!!

கேரளாவில் அடுத்தடுத்து இளம் பெண்கள் வரதட்சணைக் கொடுமை புகாரில் உயிரிழந்த சம்பங்கள் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தின.

கொல்லத்தைச் சேர்ந்த 22 வயது விஸ்மயா என்ற பெண், தனது கணவர் கிரண்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விஸ்மயாவின் மரணம் வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது. 

அவரது மரணம் சமூக ஊடகங்களில் விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. விஸ்வமயா ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை மாணவி ஆவார்.

விஸ்மயாவை அவரது கணவர் கிரண் குமார் வரதட்சணை கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஜூன் 22-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மேலும் விஸ்மயா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு உறவினருக்கு விஸ்மயா காயமடைந்த படங்களை அனுப்பியதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், விஸ்மயா பெற்றோர் விஸ்மயா மரணத்திற்கு கிரண் குமார் குடும்பத்தினரும் காரணம் என குற்றஞ்சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த கொல்லம் கூடுதல் நீதிமன்றம் விஸ்மயா கணவர் கிரண் குமாரை குற்றவாளி என நேற்று தீர்ப்பு அளித்திருந்தது.

இந்த நிலையில் இன்று தண்டனை விவரங்களை அறிவித்துள்ள கொல்லம் நீதிமன்றம் , விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் கிரண்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் 12புள்ளி  5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர். அதில் 2 லட்சம் ரூபாயை உயிரிழந்த விஸ்மயா-வின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.