60 சதவீத மக்கள் பேசும்போது, அதை பிரதமர் கேட்க வேண்டும்... விவசாயிகளுடன் பேச்சு நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்...

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

60 சதவீத மக்கள் பேசும்போது, அதை பிரதமர் கேட்க வேண்டும்... விவசாயிகளுடன் பேச்சு நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்...

நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது, .பிரதமர் விவசாயிகளுடன் பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் நியாயமான குறைகளை கேட்க வேண்டும் என கூறிய பவன் கேரா,விவசாயிகளை நாட்டின் எதிரிகளாக சித்தரிக்க பாரதிய ஜனதா முயன்று வருகிறது என்றும்  அதனால்தான் விவசாயிகள் சாலையில் இறங்கி போராடுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பவன் கெரா, ‘ஏதாவது மருத்துவமனை  கட்டுமானப் பகுதிக்கு பிரதமர் சென்றிருந்தால் நாங்கள் வரவேற்றிருப்போம். ஆனால் அவர் சென்டரல் விஸ்டா திட்டப்பணியை பார்வையிட்டது சிந்தனையற்ற, உணர்வற்ற செயல். அதற்கு ஆதரவு அளிக்க முடியாது என்றும் கூறினார்.

இதற்கு முன் பிரதமர், கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு மருத்துவமனை ஆக்சிஜன் உற்பத்தி மையத்துக்கு சென்றது மாதிரி தெரியவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்புதான் நாம் கொரோனாவால், நமது அன்புக்குரியவர் களை காப்பாற்ற போராடிக் கொண்டிருந்தோம். ஆனால் பிரதமர் 25 ஆயிரம் கோடி சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை பார்வையிட்டுள்ளார்என்றும்  அவர் அங்கு சென்ற நேரம் கேள்விக்குரியது. நாடு இன்னும் கொரோனா உண்டாக்கிய வலி, வேதனை, துயரத்தில் இருந்து மீளவில்லையே? என்றும் பவன் கேரா கேள்வி எழுப்பினார்.