பழங்குடியினருக்கான தேவைகளை நிறைவேற்றுமா பாஜக?!!!

பழங்குடியினருக்கான தேவைகளை நிறைவேற்றுமா பாஜக?!!!

முதன்முறையாக பழங்குடியின பெண்ணை இந்திய குடியரசுத் தலைவராக்கிய பாஜக அரசாங்கம் பழங்குடியின சமுதாயத்தின் வளர்ச்சிக்காக இன்று உறுதி பூண்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பல்லாரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பழங்குடியினரின் பிரச்சனைகளை குறித்து பேசியுள்ளார். 70 ஆண்டுகளாக பாஜகவைத் தவிர எவரும் இதுவரை நாட்டில் பழங்குடியினர் மீது அக்கறை காட்டவில்லை எனவும் அவர்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.  

நாட்டில் முதன்முறையாக பழங்குடியின பெண்ணை இந்திய குடியரசுத் தலைவராக்கியுள்ளது பாஜக எனக் கூறினார் நட்டா.  பழங்குடியின சமுதாயத்தின் வளர்ச்சிக்காக இன்று பாஜக அரசு உறுதி பூண்டுள்ளது எனவும் அவர்களுக்காக  உதவித்தொகை, ஏக்லவ்யா வித்யாலயா, வீட்டு வசதி, கல்வி மற்றும் சுகாதாரம் என, அனைத்து திட்டங்களிலும் பழங்குடியின சகோதரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நட்டா, பழங்குடியின சகோதர, சகோதரிகளுக்கு எல்லா வகையிலும் உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.  மேலும் நமது பழங்குடியினர், பட்டியல் இன சமூகங்களைச் சேர்ந்த மக்கள் மத்திய அரசால் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு காலகட்டத்தை நாங்கள் அரசியலில் காண்கிறோம் எனவும் பழங்குடியின சகோதர சகோதரிகளுக்கு எல்லா வகையிலும் உதவ தயாராக இருக்கிறோம் எனவும் கூறினார் ஜே.பி. நட்டா.

இதற்கு முன்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மகாராஷ்டிராவில் நடந்த இந்திய ஒற்றுமை பயணத்தில் பாஜக பழங்குடியினருக்கு எதிராக செயல்படுகிறது எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெரிந்துகொள்க:   பழங்குடியினர் நிலத்தை பறிக்க முயல்கிறதா மோடி அரசாங்கம்?!!!

-நப்பசலையார்

இதையும் படிக்க:  உலகப் பொருளாதாரத்தில் பின்னடைகிறதா இந்தியா?!!!