அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்..!

பீகாரில், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்..!

இந்தியாவில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில், வீரர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றும் வகையில், அக்னிபாத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முப்படைகளில் சேர பயிற்சி பெற்று வரும் இளைஞர்கள், தங்கள் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் எனக்கூறி, பீகாரின் நாவாடா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், டயர்களை தீயிட்டு கொளுத்தியும், தண்டால் பயிற்சி எடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெறும் 4 ஆண்டுகள் மட்டுமே நாட்டுக்கு சேவையாற்ற வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பிய இளைஞர்கள், அதற்குப்பின் வீடற்றவர்களாக மாற்றப்படுவோம் எனவும் வேதனை தெரிவிப்பதோடு, இத்திட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.