கொரோனாவே இன்னும் முடியலப்பா... அதுக்குள்ள இன்னொரு வைரஸா! பீதியில் மக்கள்!!

கொரோனா பாதிப்புகளே இன்னும் ஓயாத நிலையில், நாட்டில் முதல் முறையாக கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி ஒருவர் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகள், காய்ச்சல் மற்றும் தலைவலியுடன் கடந்த 28ஆம் தேதி, தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு, கடந்த 7ஆம் தேதி குழந்தையும் பிறந்தது. இதற்கிடையில், அவரது ரத்த மாதிரிகள் புனேவில் உள்ள வைரஸ் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில், அவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே முதன் முதலாக கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் ஏடிஸ் கொசுக்களால் பரவக்கூடியது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.