எடப்பாடி பழனிச்சாமி கைது...புதுச்சேரியில் சாலை மறியல்!

தமிழ்நாட்டில் அதிமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

எடப்பாடி பழனிச்சாமி கைது...புதுச்சேரியில் சாலை மறியல்!

எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுச்சேரியில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழனிச்சாமி கைது

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுக்காததை கண்டித்து தடையை மீறி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். 

மேலும் படிக்க : ஆளுநர் நடத்தும் மக்கள் சந்திப்பு ஜனநாயக விரோதமானது...அதிமுக கண்டனம்!

புதுச்சேரியில் சாலை மறியல்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அண்ணா சிலை அருகே புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்று, தமிழ்நாட்டில் அதிமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதேபோல் முத்தியால்பேட்டை மணி குண்டு அருகே சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.