ராகுல் நடைபயணம் நிறுத்தம்..! காரணம் என்ன?

ராகுல் நடைபயணம் நிறுத்தம்..! காரணம் என்ன?

இந்தியாவை  ஒன்றிணைக்கும் வகையில்14வது நாளாக பாதயாத்திரையை தொடங்கியுள்ள ராகுல் காந்தி, கேரளாவில் மக்களை சந்தித்து வருகிறார்.

ஒற்றுமை நடைபயணம்:

இந்தியா மக்களை கருத்தியல் ரீதியாக ஒன்றிணைக்கும் வகையில் ‘பாரத் ஜோடோ’ என்ற 150 நாட்கள் யாத்திரையை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. கடந்த 7ம் தேதி இந்த பயணத்தை தனது ஆதரவாளர்களுடன் தொடங்கிய ராகுல் காந்தி, கன்னியாகுமரியை தொடர்ந்து, தற்போது கேரளாவில் பாதயாத்திரை நடத்தி வருகிறார். அந்தவகையில் இளைஞர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கருத்தியல் ரீதியாக ஒன்றிணைத்து வருகிறார். மக்களும் அவருக்கு சிறப்பான வரவேற்பளித்து வருகின்றனர்.

தலைவர் தேர்தல்:

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17 இல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்னும் 2 நாட்களில் தொடங்குகிறது. தலைவர் தேர்தலில் ராகுல் போட்டியிடவில்லை என கூறியுள்ளார். இதனால் நேரு கும்பம் அல்லாமல் காங்கிரசுக்கு புதிய தலைவர் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மூத்த தலைவர்கள்...அப்போ ராகுல்காந்தி?

ராகுல் காந்தி தலைமை:

இதனிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, காங்கிரசின் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கட்சியின் இரண்டு முக்கிய நிர்வாகிகள் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

நடைபயணம் நிறுத்தம்:

சிகிச்சைக்குப்பின் நாடு திரும்பிய காங்கிரஸ் இடைக்காலத்தலைவர் சோனியாகாந்தியை பார்க்கவும், கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவும் வரும் 23ம் தேதி ராகுல்காந்தி டெல்லி செல்கிறார். இதற்காக ஒருநாள் மட்டும் நடைபயணத்தை நிறுத்தும் ராகுல்காந்தி, மீண்டும் 24ம் தேதி கேரளாவின் சாலக்குடியில் இருந்து நடைபயணத்தைத் தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.