கோர விபத்துக்குள்ளான சொகுசு கார்: திமுக எம்எல்ஏ மகன் உள்பட 7 பேர் பலி!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் அதிவேகமாக வந்த சொகுசு கார் சாலையோர மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், ஓசூர் எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெங்களூருவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கோரமங்களா சாலை வழியாக  இன்று அதிகாலை ஒன்றரை மணியளவில் சொகுசு ஆடி கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது. சாலையில் வாகனங்களின் நடமாட்டம் இல்லாததால், அதிவேகமாக சென்ற வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மோதி, பின்னர் அருகிலிருந்த வங்கி கட்டிடம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி பலத்த சேதமடைந்தது. தகவல் அறிந்து வந்த பெங்களூரு போலீசார், காரில் பயணித்த 3 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை உறுதி செய்தனர். இதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விசாரணையில், அந்த கார் ஓசூர் எம்எல்ஏ பிரகாஷிற்கு சொந்தமானது என்றும், அதில் அவரது மகன் கருணா சாகர் மற்றும் கேரளாவை சேர்ந்த உறவினர்களும் பயணித்ததாக கூறப்படுகிறது. தூக்க கலக்கத்தில் கார் ஓட்டியதால், இந்த கோர விபத்து நடந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்தநிலையில் சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள பெங்களூரு போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.