கர்நாடக காங்கிரஸ் தலைவரிடம் அமலாக்கத் துறை விசாரணையா?

கடந்த 2018ம் ஆண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே சிவகுமார் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் , கணக்கில் வராத ஆவணங்களை கைப்பற்றினர்.

கர்நாடக காங்கிரஸ் தலைவரிடம் அமலாக்கத் துறை விசாரணையா?

சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி. கே சிவகுமாருக்கு அமலாக்கத்துறை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.

வருமான வரித் துறை சோதனை

கடந்த 2018ம் ஆண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி. கே சிவகுமார் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் , கணக்கில் வராத ஆவணங்களை கைப்பற்றினர். இது குறித்து அமலாக்கதுறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரக்கூடிய நிலையில் மீண்டும் இவ்வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக கோரி அமலாக்கத்துறை டி. கே.சிவகுமாருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

கடமைகளை தடுப்பதாக சிவக்குமார் குற்றச்சாட்டு

அழைப்பாணை அனுப்பியுள்ள விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டி. கே.சிவக்குமார், காங்கிரஸ் கட்சியின்  "இந்திய ஒற்றுமை பயணம்" நடைபெற்று வரும் நிலையிலும், கர்நாடகா சட்டமன்ற கூட்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில் தனக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக அமலாக்கத் துறையினர் அழைப்பாணை அனுப்பி உள்ளதாக அவர் கூறியுள்ளார்.  இருப்பினும் தான் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் எனவும் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அரசியலமைப்பு சார்ந்த கடமைகள் செய்வதை தடுக்கும் வகையில் அமலாக்கத்துறையின் செயல்பாடு இருப்பதாகவும் டி. கே.சிவகுமார்  குற்றம் சாட்டியுள்ளார்.