மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பம்... முதல்வர் ஆகிறார் ஷிண்டே!

மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பம்... முதல்வர் ஆகிறார் ஷிண்டே!

கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வந்த சிவசேனா கட்சியின் உட்கட்சிப் பிரச்சினை உத்தவ் தாக்கரே பதவி விலகியதும் முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த ஜூன் 29 அன்று இரவு மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக உத்தவ் தாக்கரே அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று தனியார் நட்சத்திர விடுதியில் தேவேந்திர பட்னாவிஸ் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

மும்பையில் இன்று தேவேந்திர பட்னாவிஸ் - ஏக்நாத் ஷிண்டே இடையேயான சந்திப்பு நடைபெற்றது. இருவரும் கூட்டாகச் சென்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். பாஜக-சிவேசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கூட்டணியின் புதிய அமைச்சரவை இன்று மாலை 7.30 மணிக்கு பதவியேற்க உள்ளது. தேவந்திர பட்னாவிஸ் தான் அடுத்த முதல்வர் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே தான் அடுத்த முதலமைச்சர் என்று அறிவித்துள்ளனர்.

- ஜோஸ்